மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள ரெட்டியூர் காலனியை சேர்ந்த சடையன் மகன் மாதேஷ் (43) இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் அவருக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஆயுள் தண்டனையும், 6ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை.