இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த கஜிதா பீவி என்பவரும் அவரது பேத்தி சமீரா பானு(19) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் உயர் நீதிமன்ற உத்தரவு படி நாகை மாவட்ட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பாதிரி குப்பத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்(32) புதுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார்(27), காராமணி குப்பத்தைச் சேர்ந்த கமல்(30), செல்லாம் குப்பத்தைச் சேர்ந்த ஆனந்த்(27) ஆகியோர் கைது செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் குமார் சுரேஷ்குமார் கமல், ஆனந்த் ஆகிய நால்வருக்கும் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு. தலா 6000 ரூபாய் அபராதம் விதிப்பு. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடுவதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Tags : இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை