5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுடலைமாடன் சுவாமி கோயிலில் சாமி ஆடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2009-ல் ஐவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டனர். மீதமுள்ள 11 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags : 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை.