உக்ரைன் படைகள் பின்வாங்கி வெளியேற உத்தரவு
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியதை அடுத்து எதிர்பார்த்தது போல் ரஷ்யாவின் தாக்குதல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக டான்பாஸ் பகுதியில் உள்ள செவெரோடொனட்ஸ் நகரம் ரஷ்யாவின் முற்றுகையின் கீழ் இருந்து வருகிறது.
ஆனால், நேற்று ஒரு நாள் தாக்குதலில் மட்டும் ரஷ்ய படைகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. நகரின் 80 சதவீதம் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்து விட புறநகரில் உள்ள ரசாயன ஆலையில் வீரர்கள் தஞ்சமடைந்திருந்தனர்.இந்தநிலையில், அந்த நகரத்தில் உள்ள வீரர்கள் பின்வாங்கி வெளியேறுமாறு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளதாக உயர்நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசோவ்ஸ்டல் இரும்பாலை போல் சிக்கிக் கொண்டால் அனைவரையும் ரஷ்யா போர்க்கைதிகளாக பிடித்து விடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சியிருக்கும் லிசிசான்ஸ்க் நகரத்தையும் கைப்பற்றி விட்டால் லுஹான்ஸ்க் மண்டலம் ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :