கொரோனா விதிகளை கடைபிடியுங்கள்- கேரளா மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்

by Admin / 30-07-2021 02:55:19pm
கொரோனா விதிகளை கடைபிடியுங்கள்- கேரளா மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்



தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது.

கேரளாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கேரள அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக சிறப்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரிய மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு இன்று கேரளா சென்றுள்ளது.

இந்த நிலையில் கேரள மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவுசெய்து அனைவரும் கவனமுடன் இருங்கள்.

 

Tags :

Share via