உதயநிதியின் வயதை விட எனக்கு அனுபவம் அதிகம்: இபிஎஸ்

by Staff / 22-10-2024 01:08:42pm
உதயநிதியின் வயதை விட எனக்கு அனுபவம் அதிகம்: இபிஎஸ்

அதிமுகவில் சீனியர்களை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார்? கூவத்தூரில் நடந்த கூத்து என்ன? என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “உதயநிதிக்கு 46 வயது தான் ஆகிறது. நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். உதயநிதியின் வயதை விட எனக்கு அனுபவம் அதிகம். அனுபவத்தால், உழைப்பால் தான் எனக்கு பதவி கிடைத்தது.” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via