பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

by Staff / 21-03-2024 11:57:56am
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்ரல் 12இல் நிறைவடைகின்றன. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 12ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo