இந்தியாவுக்கு 75. 80 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி

by Staff / 05-02-2024 03:13:46pm
இந்தியாவுக்கு 75. 80 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி


சீனா உள்பட வெளிநாடுகளில் இருந்து கடந்த 2022- 2023ம் ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த உரத்தின் அளவு மற்றும் மதிப்பு என்ன? உரங்களின் தற்போதய விலை என்ன? விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் என்ன என்பது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரசாயனம், உரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை இணை அமைச்சா் பகவந்த்குபா எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில், "கடந்த 2022 -2023ல் இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ரூ. 39, 433 கோடியே 8 லட்சத்து 62 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்புள்ள 75. 80 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 12. 80 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. யூரியா தவிர்த்து பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்கள் வெளிநாடுகளில் இருந்து 112. 01 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் சீனாவில் இருந்து 13 லட்சம் மெட்ரிக் டன் பாஸ்வேர்டு மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 2023 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் பொட்டாசியம் உரங்களின் மதிப்பு எவ்வளவு என்பது அரசாங்க கணக்கில் பராமரிக்கப்படவில்லை. சட்டப்படி அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் உரம் வழங்கப்படுகிறது, "என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via