பெண்களுக்கு ரூ.1 லட்சம்.. ரூ. 500 க்கு சிலிண்டர்

by Staff / 13-04-2024 01:33:49pm
பெண்களுக்கு ரூ.1 லட்சம்.. ரூ. 500 க்கு சிலிண்டர்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தேர்தல் அறிக்கையை அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கட்சியின் முன்னணி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று  வெளியிட்டார். 24 வாக்குறுதிகள் அடங்கிய அந்த தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குத்திகளாக, ரக் ஷாபந்தனை முன்னிட்டு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்குவோம். கேஸ் சிலிண்டர் ரூ.500-க்கு தருவோம் என்பவை இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் பீகாரில் ஆர்ஜேடி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via