திமுக ஊராட்சிமன்றத்தலைவர் நீக்கம்.

by Editor / 28-05-2023 01:54:28pm
திமுக ஊராட்சிமன்றத்தலைவர் நீக்கம்.

திருச்சி மாவட்டம் துறையூர் நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் வருவாய் அதிகாரியை தாக்கிய நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை.எடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கச் சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் ஜேசிபி ஓட்டுநர் தனபால் இருவரையும் போலீசார் கைது செய்தனர் தகாத வார்த்தைகளில் பேசுதல்,காயம் ஏற்படுத்துதல்,மறித்து தாக்குதல்,அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல்,கொலை முயற்சி,கொலை மிரட்டல்,திருட்டு உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறையூர் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஊராட்சிமன்றத்தலைவர் நீக்கம்.
 

Tags :

Share via

More stories