புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த நைஜீரியர்கள் 3 பேர் கைது

by Staff / 18-05-2022 11:28:54am
புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த நைஜீரியர்கள் 3 பேர் கைது

புதுச்சேரியில் கொக்கைன்  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் வைத்திருந்த நைஜீரியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ரகசியா தகவலின்பேரில் குருசுகுப்பம் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் ஜஸ்டின் பிரான்சிஸ் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவர் விசாவில் வந்த அவர்கள் மூவரும் போதை மாத்திரைகள் கொக்கைன் மெத்தலின்  டெல்லியில் இருந்து வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories