ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை - தலிபான்கள் அட்டூழியம்

by Admin / 06-10-2021 11:46:50pm
ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை - தலிபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ம் தேதி நுழைந்த தலிபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது சிறுமியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories