கர்நாடகாவில் 25 தொகுதிகளில் ஓவைசியின் கட்சி போட்டி

by Staff / 05-04-2023 11:57:20am
கர்நாடகாவில் 25 தொகுதிகளில் ஓவைசியின் கட்சி போட்டி

கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. தற்போது மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், அவர்களுடன் கூட்டணி இருக்காது என்று கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் பதிலளித்தார். கர்நாடகாவில் தேர்தல் மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via
Logo