. 1. 4 கோடி மோசடி: 4பேர் கைது..

by Staff / 14-10-2023 02:11:14pm
. 1. 4 கோடி மோசடி: 4பேர் கைது..

கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1. 4 கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ஹரிந்தர் சிங். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில், வளர்ச்சிக்காக சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து ரூபாய் 70 கோடி பெற்று தருவதாக சிலர் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை சேர்ந்த பாஜக நிர்வாகியான ராஜசேகர் என்பவரை கைது செய்தனர். அவர் 3 பேருடன் சேர்ந்து கடன் பெற்று தருவதாக ஹரிந்தர் சிங்கை ஒரு ரூபாய் 1. 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
 

 

Tags :

Share via
Logo