கத்திமுனையில் இளம்பெண் பலாத்காரம்: அன்புமணி ஆவேசம்

கிருஷ்ணகிரியில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், கிருஷ்ணகிரியில் இளம்பெண், கஞ்சா போதையில் இருந்த 4 மனித மிருகங்களால் கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை தான் நிலவுகிறது. ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என சாடியுள்ளார்.
Tags :