சுடுதண்ணீரில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு - தந்தை கைது

by Staff / 08-07-2024 05:01:57pm
சுடுதண்ணீரில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு - தந்தை கைது

கேரளாவின் வயநாடு பகுதியில் சுடுதண்ணீர் வாளியில் விழுந்து காயமடைந்த 3 வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல உள்ளூர் மருத்துவமனை கூறியும் அதனை ஏற்காத சிறுவனின் தந்தை அல்தாப், மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் ஜார்ஜ் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்த நிலையில், தந்தை அல்தாப் மற்றும் ஜார்ஜ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo