வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 27ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இதற்கான சாதக சூழல் நிலவி வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகினால் 29ல் அது மேலும் வலுவடையும். தென்மேற்கு பருவமழை மே 25ல் தொடங்குகிறது. இது பருவமழையை தீவிரப்படுத்தும் வாய்ப்பு ஆகும். மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :