திமுகவில் இருந்து திருமாவளவன் வெளியேறுவது நல்லது” - நயினார் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிடும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எண்ணம். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம்” என்றார். மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் மு.க. ஸ்டாலின் களத்தில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Tags :