முதல்வர் ஸ்டாலின் மே 23-ல் வெளிநாடு பயணம்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 2024 ஜனவரி.11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று, மே 7ஆம் தேதி 3ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அவர் மே 23ஆம் தேதி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















