திமுக ஆதரவு அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்கும் பாஜக

by Staff / 18-11-2023 02:44:47pm
திமுக ஆதரவு அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்கும் பாஜக

தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியாக திமுக ஆதரவு மனநிலை கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை பாஜக டெல்லி மேலிடம் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் பாஜக குறிவைத்திருக்கும் கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 8 முதல் 9 மக்களவைத் தொகுதிகளில் இவர்களில் யாரையுமே பணியாற்ற விடக்கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. இந்த அதிகாரிகளைத் தேர்தல் அலுவல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo