பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு

by Staff / 22-12-2022 01:50:56pm
பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு

107 மருந்துகளின் விலை மாற்றியமைக்கப்பட்ட பட்டியல் செவ்வாயன்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் (NPPA) ஆல் வெளியிடப்பட்டது. இதில் பாராசிட்டமால், அமோக்ஸிசிலின், ரபேபிரசோல் மற்றும் மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் அடங்கும். ஒரு மாத்திரை ரூ.2.3க்கு விற்கப்பட்ட பாராசிட்டமால் (650 மி.கி.) தற்போது ஒரு மாத்திரை ரூ.1.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அமோக்ஸிசிலின், பொட்டாசியம் கிளாவுலனேட் ஆகியவற்றின் விலையும் ரூ.22.30ல் இருந்து ரூ.16.80 ஆக குறைந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்திலும், NPPA பாராசிட்டமால் கலவைகளின் விலைகளைக் குறைத்தது.

இவற்றுடன் மோக்ஸிஃப்ளோக்சசின் (400 மி.கி.) மாத்திரையின் விலையும் ரூ.31.5ல் இருந்து ரூ.22.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிமோனியா போன்ற பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தின் விலை இந்த ஆண்டு முதல் முறையாக குறைந்துள்ளது. எனினும், இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியலின்படி, இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மெட்ஃபோர்மின் (500 மில்லிகிராம்) போன்ற சில மருந்துகளின் விலை 1.7 ரூபாயில் இருந்து 1.8 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், மெட்ஃபோர்மினின் விலை பலமுறை மாறியுள்ளது. இது குறித்து, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்கள் அமைப்பின் (ஏஐஓசிடி) பொதுச் செயலாளர் ராஜீவ் சிங்கால் கூறுகையில், 'இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும், சில மருந்துகள் ஏற்கனவே மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இது எதிர்கால விநியோகத்தை பாதிக்காது என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

பெங்கால் கெமிஸ்ட்ஸ் அண்ட் டிரக்கிஸ்ட்ஸ் அசோசியேஷன் (பிசிடிஏ) செயலாளர் சஜல் கங்குலி கருத்துப்படி, என்பிபிஏ அறிவித்த பட்டியலின்படி புதிய விலைகளுடன் ஜனவரி இறுதியிலிருந்து மருந்துகள் கிடைக்கும். புதிய விலையுடன் மருந்துகள் சந்தைக்கு வர குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்றும், புதிய இருப்பு அடுத்த மாத இறுதிக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

Tags :

Share via