தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு

by Staff / 22-12-2022 01:46:45pm
தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல் நல்லாம்பட்டியில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த விஜயகுமார் வசித்து வருகிறார். இவரது பிறந்து 45 நாளான ஆண் குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் குழந்தை உயிரிழந்தது. இதனால் பெற்றோர் கொதிப்படைந்துள்ளனர். பிள்ளையார்நத்தம் குழந்தைகள் மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் இன்று குழந்தையின் மூக்கு, வாயில் ரத்தம் கசிந்து திடீரென உயிரிழந்தது. இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்றோர் கூறியதாவது: குழந்தைக்கு 45வது நாள் ஊசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்பட்டது. ஊசி போட்டதால் காய்ச்சல் வரும் என செவிலியர்கள் தெரிவித்தனர். இதை நம்பி நாங்கள் எந்த டாக்டரிடமும் அழைத்துச் செல்லாமல் இருந்தோம். இதனால் குழந்தை சோர்வடைந்து இறந்தது. எங்கள் குழந்தை இறப்புக்கு சுகாதாரத் துறை பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், என்றனர்.பச்சிளம் ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via