கொள்ளுங்கள். உங்களைப்புரிந்து

by Admin / 03-01-2023 08:12:49pm
கொள்ளுங்கள். உங்களைப்புரிந்து

உங்களைப்புரிந்து கொள்ளாமல் எவரொருவர் அன்பு காட்டவும் பாராட்டாவும செய்கிறாரோஅவரே ஒருநாள்சரியான புரிதல் இல்லாமல் வெறுக்கவும்;பகைக்கவும்;பழிதூற்றவும் முற்படுவர்.அதனால் எவரோடும் நெருக்கம் காட்டவோ-பகைமை பாராட்டவோ வேண்டாம்.நீங்கள்,நீங்களாக
இருங்கள்.உங்கள் தனித்துவம் இழக்காத வைராக்கியத்தால் மற்றவர்களால் உங்களை அழிக்கவும் சிதைக்கவும் முடியாது.உங்களைத்தவிர,உங்களை உருவாக்குகிறவர்கள்.யாவருமிலர்.நீங்கள் ,உங்களைச்செதுக்குவதில்,வளர்த்தெடுப்பதில்காலங்களைச்செலவிடுங்கள்.வீண் அரட்டை,விவாதங்கள் உங்களுக்கு எதிரானவை.அவைகளால்,எந்த வளர்ச்சியுசெயல்களும் நடைபெறப்போவதில்லை.முன்னேற்றம் சார்ந்த பணிகள் வாசல் திறந்து வைத்துக்காத்திருக்கப்போவதில்லை.உலகம்  பல்வேறு ரகசியங்களை தம் கைக்குள் வைத்து இறுக மூடியிருக்கிறது.நீங்கள்தான் .உஙகள் கடின உழைப்பால்:முயற்சியால்;அணுகுமுறையால்;திட்டமிடுதலால்;சலிக்காத மனதால் அவற்றைத்திறந்து உங்களுக்குரியது,எது என்பதை அடையாளம் கண்டு எடுக்க வேண்டும்.எல்லாம்.எல்லோருக்கவும் வைக்கப்பட்டிருக்கின்றன.புத்திசாலிகள் தா  ம் அவைகளைக் கண்டறிந்து  எடுக்கிறார்கள் .வாஸ்கோடகாமா,கொலம்பஸ்தம்முயற்சியில் தளர்ந்திருந்தால்,இன்று அமெரிக்கா போன்ற நாடுகளைக்கண்டறிந்திருக்க முடியுமா?முயற்சிதான்புகழின்
உச்சத்திற்குக்கொண்டு சென்றிருக்கிறது.தற்காலிக கஷ்டங்கள்,சிரமங்களைக்கண்டு பயந்து போகிறவர்கள் சாதனையாளர்களாகப் பரிணமிக்க இயலாது.நாம்ஒட்டு மொத்த எண்ணங்களைகொண்ட மனிதர்களுடன் தான் வாழ்ந்துவருகிறோம்.எல்லோரும் பாராட்டுவார்கள்.புகழ்வார்கள் என்று எதிர்பார்க்கஇயலாதுபோட்டி,பொறாமை,காலைப்பிடித்து இழுத்துப்போடக்காத்திருக்கும் கயமைகுணம் கொண்டோருடன் தான்  வசித்து வருகின்றோம்.இதை எல்லாம் அறிந்து கணக்கிட்டு வாழ்க்கை பாதையில் மெல்ல அடி எடுத்து வைக்கத்தயங்காமல் செயல்புரிவோனுக்கே காற்றும் மழையும் வெயிலும் கட்டுப்பட்டு நிற்கும்.இப்பொழுதும் சொல்கிறேன். நீங்கள்..நீங்களாக இருங்கள்.முதலில்..உங்களைப்புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் யார்...?
சமூகத்தில் நான் என்ன நிலையில் நிற்கிறேன்.என்னவிதமான பங்களிப்பை நான் எனக்கு வழங்கினால் ,இந்த உலகம்
என்னை வணங்கும் என்று அறிந்து கொள்ள முயலுங்கள்.

கூழைக்கும்பிடு,தற்காலிக புகழ்ச்சி,மரியாதை,உபசரிப்புகளை மட்டுமே நிரந்தரம் என்று நம்பிக்கொண்டிரூக்கும் நபர்கள் தீர்க்கமான சிந்தனை,செயல்பாடு உள்ளவர்களை நேசிப்பதில்லை.மாறாக,அவர்களை அவமானப்படுத்தவும்அழித்தொழிக்கவும் முயல்வர்.ஆகவே,லட்சியம் கொண்டோர்,சராசரியான நிலைப்பாட்டில் கவனம் செலுத்தாமல்,நாம்? நம் பணி என்ன என்பதை உணர்ந்து அதற்கு தக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.உழைப்பவனைத்தான் உலகம் இரு கைகூப்பி வரவேற்கும்.எனவே,உங்கள் தனித்துவம் சிதைந்து போகாமல்,சதைக்கப்படாமல் நீங்கள் நீங்களாக இருங்கள்.உரு சிதைக்கப்பட்ட எந்தப்பொருளுக்கும் மதிப்பு இருப்பதில்லை

 

Tags :

Share via