நஞ்சப்பசத்திரம் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் பல்வேறு உதவிகளை செய்தனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் நஞ்சப்பசத்திரம் கிராமத்திலுள்ளவர்களுக்கு ராணுவ மருத்துவ சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துஉத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :



















