குளிர்பானத்தில் விஷம்.. வழக்கில் திருப்பம்..?

திருமணமான 26வது நாளில் குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுத்ததாக கூறி மருத்துவமனையில் 17 நாட்களாக சிகிச்சையில் இருந்த கடலூரை சேர்ந்த கலையரசன் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், போலீசார் விசாரணையில் மனைவி விஷம் கொடுக்கவில்லை எனவும், கலையரசனே விஷம் கலந்து குடித்ததாக அவரது நண்பரிடம் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே ஒருவரை காதலித்ததாக கூறிய மனைவியை பழிவாங்க இதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கலையரசன் மருந்து வாங்கிய ரசீதும் கிடைக்கப்பெற்றுள்ளது.
Tags : குளிர்பானத்தில் விஷம்.. கணவன் கொலை வழக்கில் திருப்பம்