ஆருத்ரா மோசடி - துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்

by Staff / 07-10-2023 03:19:14pm
ஆருத்ரா மோசடி - துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்

ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துகளை கண்டறிந்து, 60 சொத்துகள் இதுவரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.102 கோடி வங்கி கணக்கை முடக்கி, ரூ.6.5 கோடி பணம், 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கி உள்ள இயக்குனர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo