கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

by Editor / 26-05-2021 02:54:03pm
கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

திருச்சியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 7ஆம் ஆண்டை கருப்பு தினமாக அனுசரிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன. அதனை ஏற்று திருச்சியில் தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட தலைவர் மேகராஜன், செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது விவசாய சங்கத்தினர், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கவும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறியல் போராட்டம் காரணமாக திருச்சி – கருர் புறவழிச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via