200 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த சிவாலயத்தில் மகா வேள்வி நடைபெற்றது.

by Staff / 14-10-2023 05:02:14pm
200 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த சிவாலயத்தில் மகா வேள்வி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக விளங்குவது சுந்தரேஸ்வரபுரம் பகுதி.இங்கு 200 மகான்கள் ஒரே இடத்தில் ஜீவ சமாதியான பல நூறு  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் வழிபாடு செய்யப்பட்ட மீனாட்சி மற்றும் ஈசன் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் ஜீவசமாதி ஆன சித்தர்களின் பீடங்களும் இந்த ஆலயத்தில் பராமரிப்பில்லாமல் பழுதடைந்து கிடந்தது தொடர்ந்து அதே பகுதியைச் சார்ந்த சிவனடியார் ஒருவர் ஆலயத்தை புனரமைப்பு செய்து பொதுமக்கள் வழிபாடு செய்யும் அளவுக்கு பொதுமக்களின் பங்களிப்போடு ஆலயத்தில் பல்வேறு புணரைப்பு பணிகளை மேற்கொண்டார் இதன் தொடர்ச்சியாக இந்த ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இன்று இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத மஹாலய அமாவாசை தினமான இன்று 500 வது மகா வேள்வி ஆலயத்தில் நடைபெற்றது இந்த ஆலயத்தில் நடைபெற்ற மகா வேள்வியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த ஏராளமான சிவனடியார்கள், மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் மகா வேள்வியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்ற வண்ணம்  இருந்தனர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via