காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

by Staff / 10-03-2024 01:31:41pm
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் இம்முறை திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் காண்பது கவனிக்கத்தக்கது.இது தொடர்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், ‘நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று (மார்ச் 3) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினர். அதில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி என 10 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo