அமீரக ஆட்சியாளருக்கு தனது சொந்த ஜாக்கெட்டை வழங்கிய ரஷ்ய அதிபர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளருக்கு ரஷ்ய அதிபர் புடின் தனது சொந்த ஜாக்கெட்டை வழங்கினார்.
அதிகாரப்பூர்வ பயணமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்த ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யானுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ஜாக்கெட்டை வழங்கினார்.
ஷேக் முகமதுவின் உதவியாளர்கள் அவருடன் காத்திருந்த போது புடின் தனது ஜாக்கெட்டை கொடுத்தார். ரஷ்யாவில் தற்போது குளிர் அதிகப்படியாக இருப்பதால், அதிபர் தனது ஜாக்கெட்டை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உடனான ரஷ்யாவின் உறவுகளை புடின் பாராட்டினார். சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டு, இரு நாடுகளும் சுமுகமான உறவைப் பேண வேண்டும் என்றும், உலகின் ஸ்திரத்தன்மைக்கு இது அவசியம் என்றும் புதின் கூறினார். எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் OPEC-இன் முடிவை புடின் வரவேற்றார்
Tags :