மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது

by Editor / 09-08-2025 02:26:55pm
 மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த கொத்தனார் நட்டார் (வயது 55). நட்டார் தினமும் மதுபோதையில் மனைவி முத்தம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு  போதையில் முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்தம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via