திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்
திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அவருக்கு புதிய பதவியை வழங்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2001-2006ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
Tags :



















