மாண்டஸ் புயல் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் 3 மணி நேர இடைவெளியில் சுமார் 65 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் மரங்கள் விழுந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களின் துணை கொண்டு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















