கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல்  பள்ளிகள் திறப்பு:

by Editor / 06-08-2021 05:33:18pm
 கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல்  பள்ளிகள் திறப்பு:

 


கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில்  நடைபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கூட்டத்தில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு  ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு நேரத்தை  நீட்டிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருந்த நிலையில், தற்போது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வார இறுதியில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 


இதற்கிடையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories