கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது.

by Editor / 29-06-2024 09:59:59am
கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது.

 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், முறையான படிப்பறிவு இல்லாத கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை, சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், ஆளில்ல வீட்டில் பரிசோதனை செய்த போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளனர். இந்த முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததால், கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது.

Share via

More stories

Logo