புதிய மொபைல் ஆப்-மின் வாரியம் அறிவிப்பு

by Admin / 28-01-2022 03:59:10pm
புதிய மொபைல் ஆப்-மின் வாரியம் அறிவிப்பு

 
கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் பணியை, பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

இதற்கான ஒரு முயற்சியாக, நுகர்வோரே மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையில், கைப்பேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது, குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

செயலியின் சாதக, பாதகங்களை, நுகர்வோர் கண்ணோட்டத்தின் வாயிலாக ஆராய்ந்து தலைமையகத்துக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


 

 

Tags :

Share via

More stories

Logo