11,608 பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது.

by Editor / 26-01-2025 04:54:10pm
 11,608 பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது.

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டத்தின் போது 11,608 பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.

 

Tags : 11,608 பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது.

Share via