இந்தியாவிலிருந்து நிவாரண பொருட்கள் ராணுவ விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

by Admin / 29-11-2025 09:42:09pm
 இந்தியாவிலிருந்து நிவாரண பொருட்கள் ராணுவ விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இன்று டிட் வா புயல் சூறாவளியால் கடுமையாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு உள்ளான இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக ஆபரேஷன் சாகர் பந்து என்ற உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலிருந்து நிவாரண பொருட்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் ராணுவ விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 21 டன் நிவாரண பொருட்கள், கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருள்கள் மற்றும் உடனடியாக உண்ணக்கூடிய உணவுப் பொருள்கள் ஆகியவை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன., இதற்கு ,இந்திய விமானப்படையின் சி 130 ஜெ மற்றும் ஐ எல் 76 ரக போக்குவரத்து விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. எண்பதுக்கும் மேற்பட்ட நன்கு பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் இரண்டு சிறப்பு மீட்பு குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர் விமானப்படை மட்டுமல்லாது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய போர்க் கப்பல்களும் நிவாரண பணியில் ஈடுபடுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

 இந்தியாவிலிருந்து நிவாரண பொருட்கள் ராணுவ விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
 

Tags :

Share via

More stories

Logo