பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 8 பேர் பலி

by Staff / 31-10-2022 10:40:34am
பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 8 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்-பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo