சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி.
மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பெளர்ணமி என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தால் தடை விதிக்கப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர் வரக்கூடும் என்பதால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags :