கரண்டுபில்லு கண்ணைக்கட்டுதே கவலையில் கர்நாடக மக்கள்
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுவரை இந்த உயர்வு அமலில் இருக்குமென தெரிவிக்கபட்டிருப்பதால் அடுத்தும் மின்கட்டணம் உயருமா என்ற அச்சம் இப்போதே மக்களை ஷாக்காக்கியுள்ளது.
Tags :