கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்!

by Editor / 19-06-2021 07:08:26am
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்!

உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இதுவரை அந்நாட்டில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்!
 

Tags :

Share via

More stories