விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள்  16 பேர் அதிரடி பணியிட மாற்றம்.

by Editor / 10-04-2025 09:33:21am
விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள்  16 பேர் அதிரடி பணியிட மாற்றம்.

விருதுநகர் மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) நம்பிராஜன் சேத்தூர் சரகத்திற்கும், வச்சக்காரபட்டி காவல் ஆய்வாளர் பொன்மீனா சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல விருதுநகர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா வச்ச காரப்பட்டி இன்ஸ்பெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் நெல்லை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி, சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி , வெம்பக்கோட்டை ஆய்வாளர் சங்கர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மதுரை கோட்ட டிஐஜி உத்தரவிட்டார். 

அதேபோல சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வத்திராயிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், வத்திராயிருப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன் வன்னியம்பட்டிக்கும், வன்னியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சூலக்கரை எஸ்ஐ கார்த்திகா, வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ சதீஷ்குமார் , சிவகாசி கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ ஆனந்தகுமார், ஆலங்குளம் எஸ்ஐ ரபீஅம்மாள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து விருதுநகர் எஸ்பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் ஏழு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள்  16 பேர் அதிரடி பணியிட மாற்றம்.

Share via