இருசக்கர வாகன ஓட்டிகளோடு கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற தென்காசி காவல்துறையினர்.

by Editor / 01-01-2024 01:27:57am
இருசக்கர வாகன ஓட்டிகளோடு கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற தென்காசி காவல்துறையினர்.

இருசக்கர வாகன ஓட்டிகளோடு கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற தென்காசி காவல்துறையினர்.


இன்று புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு தென்காசி மேம்பாலத்தில் வைத்து அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து அவர்களோடு தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கு நன்றி சொல்லி புதியதாக பிறந்த 2024 ஆம் ஆண்டினை வரவேற்று இந்த ஆண்டில் தீய பழக்கவழக்கங்களை ஒழித்து நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்தி குடும்பத்தினருனுடைய மகிழ்ச்சி பகிர்ந்து வாழ்வதற்கு சபதம் ஏற்று தங்களோடு பழகும் நபர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வலியுறுத்தியும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும்,போதைப்பொருட்கள் விற்பனைகள் ஏதுமனடைந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்,பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுமெனவும்கூறி  புத்தாண்டை வரவேற்று  கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் மேம்பாலம் வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினர் புத்தாண்டை  வரவேற்கும் விதமாக புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி கேக் வழங்கினர். காவல் துறையினரின் இந்த புதிய முயற்சி வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.மேலும் இருசக்கரவாகனங்களின் குடும்பத்தோடு வரும் நபர்களிடம் நகைகளை பத்திரமாக பாதுகாத்து செல்லவும் அறிவுரை வழங்கினார். புத்தாண்டில் தென்காசியில் நடைபெற்ற நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வாக பொதுமக்களால் பேசப்படுகிறது.

 

Tags : இருசக்கர வாகன ஓட்டிகளோடு கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற தென்காசி காவல்துறையினர்.

Share via