ரயிலில் இவற்றை கொண்டு சென்றால் சிறை தண்டனை

by Staff / 28-08-2023 12:07:00pm
ரயிலில் இவற்றை கொண்டு சென்றால் சிறை தண்டனை

மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை கொண்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கேஸ் சிலிண்டர்கள், வெடிபொருட்கள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், அமிலம், எரியக்கூடிய/வெடிக்கும் ரசாயனங்கள், வைக்கோல், 20 கிலோவுக்கும் அதிகமான நெய் ஆகியவை கொண்டு செல்ல கூடாது. விதிகளை மீறினால் ரூ.1,000 அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது..

 

Tags :

Share via