மதுரையில் மரங்களை அகற்ற நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை முழுவதும் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம், வில்லாபுரத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் சாலையில் இடையூறாக இருக்கும் மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனிடையே நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது அதை அப்புறப்படுத்தக்கூடாது என தடுத்து நிறுத்தினர். குடியரசு தலைவரின் ஒரு நாள் வருகைக்காக பல வருடங்களாக இருக்கும் மரங்களை வெட்டுவது கேளிக்கையாக உள்ளது என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags :