தீ விபத்து.. 50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசம்

by Admin / 08-02-2022 02:17:59pm
தீ விபத்து.. 50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்பகுதிகளில் அறுவடை முடிந்த நிலையில் வியாபாரிகள் வைக்கோல் ஏற்றி கொண்டு லாரியில் சென்றனர். 

வழுதலம்பேடு அருகே லாரி வந்த போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதில் வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்தது. 

உடனடியாக லாரி ஓட்டுநர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்து அவசர உதவிக்கு தகவல் கொடுத்தார்.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். 

எனினும் லாரியில் ஏற்றி செல்லப்பட்ட சுமார் 50,000 ரூபாய் மதிப்பிலான வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.இதனால் அந்த இடத்தில் பதாடடமான சூழ்நிலை ஏற்ப்பட்டது .
 

 

Tags :

Share via

More stories