அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

by Staff / 11-07-2024 11:46:17am
அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்தூவி  மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

 

Tags :

Share via