தமிழக-கேரள எல்லையில் காவல்துறை தீவிர சோதனை.

by Editor / 01-01-2024 01:27:16am
 தமிழக-கேரள எல்லையில் காவல்துறை தீவிர சோதனை.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வந்தாலும் எல்லைப் பகுதியிலுள்ள சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு அத்திவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் கூடுதலாக வாகனங்களும் கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன இதில் தொடர்ச்சியாக கேரளா செல்லும் பயணிகள் வாகனமும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் வாகனமும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே தமிழகத்திற்குள்ளும் கேரள மாநிலத்திற்குள்ளும் அனுமதிக்கப்பட்டன. இந்த பணியில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் கண்ணா உதவி ஆய்வாளர் தீபன் குமார் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

 

Tags :  தமிழக-கேரள எல்லையில் காவல்துறை தீவிர சோதனை.

Share via

More stories

Logo