சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரித்த சகோதரர்கள் கைது.

by Staff / 17-06-2024 05:13:15pm
சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரித்த சகோதரர்கள் கைது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாற்று சமூக இளைஞரை காதல் செய்த சகோதரியை, சகோதரர்கள் இருவர் கழுத்தை நெரித்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மே 30ம் தேதி கஹாடாவ் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் சங்கீதா(18) என அடையாளம் காணப்பட்டார். விசாரணையில் சங்கீதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரர்கள் சங்கர் மற்றும் துர்க்கேஷ் சைனி ஆகியோர் காரில் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via